நுவரெலியா மத்திய சந்தையில் மரக்கறி வகைகளின் விலை தற்போது வீழ்ச்சி கண்டு வருவதாக நுவரெலியா மத்திய சந்தையில் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், மரக்கறிகளை குறைந்த விலைக்கே விற்பனை செய்கின்றோம் . ஆனால் கொள்வனவு குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் மிஞ்சும் காய்கறிகளை குப்பையில் போடவேண்டியதாக இருக்கிறது என அங்கலாய்ந்துக்கொண்டனர்.
தொடர்ந்து இவ்வாறு குறைவான விலைக்கு விற்பனை செய்வதால் தங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இதில் மின்சாரப் பட்டியல் கட்டணத்தைக் கட்டுவதா அல்லது வீட்டுச் சுமையைச் சரி செய்வதா, கடைக் கூலியைக் கட்டுவதா, கடையில் தொழிலுக்கு வருபவர்களுக்கு சம்பளம் வழங்குவதா ? என்ற வினா அனைத்து மரக்கறி வியாபாரிகள் மத்தியிலும் எழுந்துள்ளன.
இன்றைய(24) விலைப்பட்டியலின் படி,
ஒரு கிலோ போஞ்சி 600 ரூபாவிலிருந்து 540 ரூபாவாகவும் கறி மிளகாய் 600 ரூபாவிலிருந்து 500 ரூபாவுக்கும், தக்காளி ஒரு கிலோ 500 ரூபாவிலிருந்து 380 ரூபாவுக்கும், ஒரு கிலோ கரட் 400 ரூபாவிலிருந்து 360 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 360 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும், லீக்ஸ் ஒரு கிலோ 320 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும், உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ 340 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மரக்கறிக் கடை உரிமையாளர்கள் கவலைத் தெரிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment