IMG 20220810 WA0055
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் சிக்கும் போலி நாணயத்தாள்கள்! – இன்றும் ஒருவர் கைது

Share

இளவாலை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களைக் கொடுத்து ஏமாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளுக்கு அண்மையில் சென்ற ஒருவர் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வழங்கி பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

போலி நாணயத்தாள்கள் என அறிந்த கடைக்காரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாடுகள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று மாலை முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, நல்லூர் ஆலய சூழலில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். எனவே பலர் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

IMG 20220810 WA0054

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
2 9
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: வெளிநாட்டவர் கைது

பௌர்ணமி விடுமுறை அன்று அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரவு நேர களியாட்ட...

4 9
இலங்கைசெய்திகள்

போதைப் பொருட்களை அடையாளம் காண புதிய அதிகாரிகள் நியமனம்

போதைப் பொருட்களை அடையாளம் காண்பதற்கான புதிய இரசாயன பகுப்பாய்வாளர்கள் 50 பேர் புதிதாக இணைத்து கொள்ளப்படவுள்ளதாக...

5 9
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம்...

8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...