ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு!
ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மேலதிகமாக 5 ஆயிரம் மேலதிக கொடுப்பனவு வழங்க வர்த்தமானி சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது
இதனை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இணைய வழி கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மாத்திரமே செப்ரெம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்களின் நலன்கருதி உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப்பத்திரங்களை மாத்திரம் அனுப்பிவைக்க அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பப்பத்திரங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Leave a comment