நாட்டில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அலுவலகப் பணிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் விசா நீடிப்பை பெற்றுக் கொள்ளவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகளுக்கு தீர்வாக இவ்வாறு விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
Leave a comment