குரங்குகள் ஏற்றுமதி – காரணம் வெளியிட்டது அமைச்சு!!

monkey

இனப்பெருக்க நோக்கத்திற்காக டோக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாக கமத்தொழில் அமைச்சு செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விலங்குகள் இனப்பெருக்க நிறுவனம் என்ற ஒரு நிறுவனம் 100,000 டோக் குரங்குகளைக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கோரிக்கையை அமுல்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களைக் கேட்க அமைச்சு  ஒரு கருத்துக்களத்தை தொடங்கியுள்ளது. சுற்றாடல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத்துறை அமைச்சு, மதத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த குரங்கு ஏற்றுமதி தொடர்பில் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

“நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் சிறந்த யோசனைகள் கருத்துக்களை சேகரிப்பதைக் கொண்டு, குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சு தீர்மானம் மேற்கொள்ளும்“.

“குரங்குகளால் பெருமளவிலான பயிர்கள் நாசம் செய்யப்படும் பிரதேசங்களிலிருந்து குரங்குகளை அப்புறப்படுத்த அமைச்சு எதிர்பார்த்திருக்கிறது. மாறாக காடுகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் குரங்குகளை அப்புறப்படுத்துவது நோக்கமல்ல“ என அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version