ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு மாத்திரம் இந்த வரிச் சலுகை செல்லுபடியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment