tamilni 434 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்! கடைசி ஆசையை நிறைவேற்ற மறுக்கும் குடும்பத்தினர்

Share

வெளிநாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்! கடைசி ஆசையை நிறைவேற்ற மறுக்கும் குடும்பத்தினர்

போதைப்பொருள் கடத்தல் காரணமாக கடந்த 27ஆம் திகதி குவைத் மத்திய சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர உறவினர்கள் விருப்பமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மேல் ஹல்மில்லேவ அதிரணிகம பகுதியைச் சேர்ந்த ஜூட் ரவிந்து கூப்பர் (வயது 43) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் பிரியங்கரகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர உறவினர்கள் விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரின் இறுதி விருப்பத்தின்படி, அவரது உடல் இலங்கையில் உள்ள அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குவைத் தூதரகத்தின் ஊடாக உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்

அநுராதபுரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் எச்.எம்.சுனில் அதிராணிகம உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்று உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் குவைத் தூதுவர் கே. காண்டீபனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உறவினர்கள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...

அகில விராஜ் காரியவசம் 3
இலங்கை

காரியவசம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசாத்தினால், பொலிஸ் மா அதிபர் தொடர்பில்...

சுரேஷ் சலே
இலங்கை

சுரேஷ் சலேவினால் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் பரிசீலனைக்கு!

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத்...

திருட்டு
இலங்கை

விசேஷ வீட்டில் திருட்டு – யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தாலிக்கொடி...