2020-2021 ஆண்டுக்கான ஆசிரியர் கலாசாலை இறுதி ஆண்டு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக குறித்த பரீட்சைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரிய காலாசாலையின் இறுதி ஆண்டு பரீட்சைகள் எதிர்வரும் 21-26 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் நடைபெறும் திகதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
1 Comment