sathosa
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு!

Share

மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரிய வெங்காயம், சிகப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு), மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தம் நாளை (21) முதல் அமுலுக்கு வரும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 378 ரூபாவாகும்.

425 கிராம் உள்ளுர் டின் மீன்களின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 480 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ மிளகாயின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1780 ரூபாவாக பதிவு செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ நெத்தலியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...