JAPPAN
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

Share

விவசாயத் துறையில் பணிபுரிய ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்க்கையில்,

விசேட திறன்களுடன் கூடிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய தாதிய சேவைகள் மற்றும் உணவு பானங்கள் சேவைகளுக்கு மேலதிகமாக விவசாயத் துறையிலும் தொழில் வாய்ப்புகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

விவசாயத் துறையில் உள்ள தொழில்வாய்ப்புகளுக்கு ஜப்பானிய மொழித் தேர்ச்சியுடன் கூடுதலாக தொழில்முறை தகுதிகள் அவசியம்.

இதற்கமைய, 17 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் தகுதிக்காண் பரிசோதனைகளுக்கான பரீட்சைகள் இணையம் ஊடாக இடம்பெறவுள்ளன.

இதற்கான தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக இணையத்தளத்தின் ஜப்பான் தொழில் வாய்ப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்திற்கு சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...