15 5 scaled
இலங்கைசெய்திகள்

தேர்தல் தாமதமாகும் அபாயம்

Share

தேர்தல் தாமதமாகும் அபாயம்

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள் துரித கதியில் பூர்த்தி செய்யப்பட ​வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையானது நாடாளுமன்ற தேர்தல் முறையை கலப்பு விகிதாசார முறைக்கு கொண்டு செல்வது பற்றியதாகும்.

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படுவதாயின், அதில் ஒரு அங்கமாக வரும் எல்லை நிர்ணயத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் இணக்கம் காணப்பட வேண்டும்.

ஏதோ ஒரு வகையில் எல்லை நிர்ணயம் முடிவுக்கு வரவில்லை என்றால், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், தேர்தல் முறையில் திருத்தம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கும் திருத்தத்தை இந்த வரைவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

இல்லாவிட்டால், தேர்தல் முறை திருத்தப்பட்டு, சட்டம் இயற்றப்படும், எல்லை நிர்ணயம் முடிவடையாமல் போகலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....