மூன்று சிறார்கள் உட்பட மேலும் எட்டு இலங்கையர்கள் இன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும், மன்னாரை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரிலிருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி பாலம் அருகே வந்திறங்கிய அவர்கள், தாமாகவே ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
இதனையடுத்த மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது, பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால்தான் இங்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 149 இலங்கையர்கள் தமிழகம் சென்றுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment