ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 14ஆம் திகதி உலக முட்டை தினம் அனுஷ்டிக்கப்படுவதாகவும், இலங்கையில் முதன்முறையாக அன்றைய தினம் ஹம்பாந்தோட்டை – அங்குனகொலபெலஸ்ஸவில் 500 தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதி வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு IEC – சர்வதேச முட்டை மாநாட்டில் வியன்னாவில் முதன்முறையாக முட்டைகளுக்கு ஒரு சர்வதேச தினத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் உலக முட்டை தினம் பல நாடுகளாலும் கொண்டாடப்படுகின்ற போதிலும் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.
#SriLankaNews
Leave a comment