முட்டை விலை
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி!

Share

முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தலையிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவிக்கையில்

இந்தியாவில் தற்போது முட்டை ஒன்றின் விற்பனை விலை சுமார் 18 ரூபாவாக உள்ளது மேலும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்து இந்த நாட்டில் ஒரு முட்டையை 20 ரூபாய்க்கு வழங்குவது மிகவும் எளிதானது.

தற்போது ஒரு முட்டையின் விலை 58, 60, 65 ரூபாயாக உள்ளதாகவும், இதனை நியாயமாக விலையில் விற்காமல் விற்பனையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆளுக்கு ஒரு விலையில் விற்று நுகர்வோர் சுரண்டப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

பொதுவாக ஒரு முட்டை உற்பத்தி செய்ய ஏழு மாதங்கள் ஆகும் எனவும், முட்டையை இறக்குமதி செய்து, முட்டையின் விலை கட்டுபடியாகும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் தொழிற்சங்கம் கோரிக்கை விடுப்பதாகவும் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
2 9
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: வெளிநாட்டவர் கைது

பௌர்ணமி விடுமுறை அன்று அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரவு நேர களியாட்ட...

4 9
இலங்கைசெய்திகள்

போதைப் பொருட்களை அடையாளம் காண புதிய அதிகாரிகள் நியமனம்

போதைப் பொருட்களை அடையாளம் காண்பதற்கான புதிய இரசாயன பகுப்பாய்வாளர்கள் 50 பேர் புதிதாக இணைத்து கொள்ளப்படவுள்ளதாக...

5 9
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம்...

8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...