சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாட்டை வந்தடைந்தது முட்டை!

Share

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த முட்டை கையிருப்பு இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்த முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்கமைவாக 2 மில்லியன் முட்டைகள் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டைகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் பின்னர் அவை  சந்தைக்கு அனுப்பப்படவுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி தொழில் சார்ந்தவர்களுக்கு மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...