அரசியல்இலங்கைசெய்திகள்

பொருளாதார நெருக்கடி! – புலம்பெயர் உறவுகள் உதவ வேண்டும் என்கிறார் சுமந்திரன் எம்.பி

Share
20220319 114838 scaled e1649815234236 300x213 1
Share

தற்பொழுது இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் கடந்து புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள எமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கப் போவதாக தமிழக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நாங்கள் அதனை வரவேற்கிறோம். ஆனால் பொருளாதார நெருக்கடியினால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே அனைவருக்கும் அந்த உதவிகளை வழங்கினால் நல்லதாக இருக்கும் என நாங்கள் எமது கருத்தினை தெரிவித்திருந்தோம்.

அதனை செவிமடுத்து இலங்கையில் உள்ள அனைவருக்கும் உதவி வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது..அது ஒரு நல்ல விடயம் அதேபோல புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகளும் அவ்வாறான ஒரு வேலைத் திட்டத்தினை தற்போதுள்ள நாட்டிலுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு செயற்பட்டால் மிகவும் நல்லதாக இருக்கும்.

எனவே புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன் நீங்களும் எமது உறவுகளுக்கு உதவிகளை வழங்கினால் நல்லதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
2 14
இலங்கைசெய்திகள்

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள் விபரம்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று...

2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...