2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இந்த அரசாங்கம் வெடித்துச் சிதறிவிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பட்டாளர்களுடனான சந்திப்பின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்;
2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் அரசாங்கம் வெடித்து சிதறிவிடும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
அரசாங்கம் வெடித்து சிதறும் போது, மக்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரே தலைமைத்துவத்தை கொண்டுள்ள கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்த பல தரப்பினர் தற்போது உதவி வருகின்றனர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த ஆண்டு தீர்மானகரமான ஆண்டு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment