Parliment in one site 800x534 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இரட்டைக் குடியுரிமை – தீர்மானம் இன்று

Share

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...

Untitled 41
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கு: பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,...

Untitled 40
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடிப் பேச்சு: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின்...

Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 4 பேருக்கு மரண தண்டனை!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று தனித்தனி கொலை வழக்குகளின் தீர்ப்பை இன்று...