1
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழகம் சென்ற யாழ் இளைஞர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் வழக்கு ?

Share

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து இன்று காலை தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கிணறு காலை தமிழகம் , தனுஷ்கோடியை அண்மித்த தொண்டி பகுதியில் தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைதான இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் இருவரையும் அகதிகளாக ஏற்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 8 1
செய்திகள்இலங்கை

சிறையில் ஆடம்பர வாழ்க்கை: போதைப்பொருள் பாவனை, மசாஜ் காணொளி விவகாரம் – விசாரணை ஆரம்பம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாகவும் வசதியாகவும்...

25 690c6471b9451
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து இலங்கை ஏதிலிகள் தாயகம் திரும்புதல்: தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்பும் பணிகள் மீண்டும் ஆரம்பம் – UNHCR அறிவிப்பு!

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகள் தன்னார்வ அடிப்படையில் தாயகம் திரும்பும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, ஏதிலிகளுக்கான...

image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...