மருந்து தட்டுப்பாடு! – சிகிச்சைகள் பாதிப்பு

rajasthans free medicine scheme secures top rank

தற்போதைய மருந்து தட்டுப்பாடு, கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண் வில்லைகளுக்கான தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையாக உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.

கண்வில்லைகள், சத்திர சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு அரச மருந்து களஞ்சியசாலையிலும் இதற்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version