3
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை..! நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!

Share

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செனானி தயாரத்ன, இந்த மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதியரசர்கள் அமர்வு கால அவகாசம் வழங்கியுள்ளது.

அத்துடன், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...

images 5 3
இலங்கைஏனையவைசெய்திகள்

மனிதக் கடத்தலை ஒழிக்க இலங்கையின் புதிய வியூகம்: 2026 – 2030 தேசிய மூலோபாயத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் பலமோர் பணிச்சட்டகத்தின் (Palermo...

26 695ce6c29f3e6
உலகம்செய்திகள்

சுவிஸ் தீவிபத்து: 40 பேர் பலியான சோகம்; நினைவேந்தலில் பங்கேற்க பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வருகை!

சுவிட்சர்லாந்தின் பனிச்சறுக்குத் தலமான கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana) உள்ள மதுபான விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த பயங்கரத்...

articles2FSjIn8EoqvQGDicvUvLR1
செய்திகள்இலங்கை

திரிபோசா உற்பத்திக்கு வலுசேர்க்கும் புதிய திட்டம்: 10 மில்லியன் டொலர் நிதியுதவியில் 7,500 விவசாயிகள் பயன்பெறுவர்!

இலங்கையில் திரிபோசா (Thriposha) உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்தின் தரத்தை மேம்படுத்தவும், விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தவும் புதிய...