pfizer. 6785678
இலங்கைசெய்திகள்

உயிர்களுடன் விளையாட வேண்டாம்- சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

Share

கொரோனா நோய்க்கு (COVID 19) எதிரான தடுப்பூசிகளில் pfizer m RNA தடுப்பூசியானது உரிய முறையில் -60C தொடக்கம் -90 C பேணப்பட்டால் அதனுடைய ஆயுள் காலம் 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு அதிகரிக்கப்படலாம் என்பதை உரிய ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளிவல்லிபுர நாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) நிறுவனத்தாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தாலும் (WHO ) ஏற்றுக் கொள்ளப்பட்டு அமெரிக்கா முதலான உலகின் பல நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசியின் விலை 19.5 அமெரிக்க டொலர் அல்லது இலங்கை ரூபாய்களில் 7000 ஆகும். உலக சுகாதார ஸ்தாபனம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கோடிக்கணக்கில் செலவழித்து கொரோனா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக தருவித்து இருக்கிறது.

வடக்கில் குறிப்பாக வன்னி பகுதியில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் வீதம் குறைவாக இருப்பதுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பலர் ஒரு தடவை கூட தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களில் அறிவுறுத்தப்பட்டது போல் வடக்கிலும் ஆயுள் காலம் நீடிக்கப்பட்ட pfizer m RNA தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து ஊடகங்களுக்கும் விபரங்கள் சுகாதார திணைக்களத்தினால் சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டு இருந்தது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க பொறுப்பு வாய்ந்த மருத்துவர்களையோ, துறைசார் மருத்துவ நிபுணர்களையோ கலந்தாலோசிக்காது அல்லது ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை ஆராயாது சில தமிழ் ஊடகங்கள் வேண்டுமென்றே ஏனைய மாகாணங்களில் நிராகரிக்கப்பட்ட காலாவதியான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு சிங்கள மருத்துவர் பாடசாலை மாணவர்களை பலவந்தப்படுத்துவதாக விஷமத்தனமான இனவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் முன்னர் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத நிலையில் அவர்களுக்கு இப்போது இலங்கையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கனடா உட்பட பல நாடுகளில் தற்போது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் தொடக்கம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்ற நிலையில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...