298534556 6313943521966524 3112426230294896555 n
அரசியல்இலங்கைசெய்திகள்

வெளியே வர வேண்டாம்! – கோட்டாவுக்கு தாய்லாந்து பணிப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாங்கொக்கில் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர்

இதேவேளை, அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு விசேட கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறுகோரி மிகப்பெரும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த போராட்டம் இடம்பெற்ற நிலையில், தலைமறைவாகியிருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலிருந்து தப்பித்து மாலைதீவு சென்றார்.

அங்கு தங்கியிருந்த அவர், ஒரு சில தினங்களில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் அவருக்கு சாதாரண விசாவே வழங்கியிருந்த நிலையில், இங்கிருந்து தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.

தாய்லாந்து அரசும் அவருக்கு தற்காலிக விசாவே வழங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் கோட்டாபய வந்திறங்க முடிவு செய்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் அவர் பாங்காக் ராணுவ விமான தளத்தில் தரையிறங்கியுள்ளார்.

இங்கிருந்து பெயர் வெளியிடப்படாத தனியார் ஹோட்டலுக்கு கோட்டாபய ராஜபக்ச அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில், தாய்லாந்து சிறப்பு பிரிவு பொலிஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர் எனவும், அவரது பாதுகாப்பு கருதி அவரை வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...