சீனா மற்றும் இலங்கை இடையிலான வழமையான செயற்பாடுகளுக்கு தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும் என சீனா வெளிநாட்டு அமைச்சர் வாங் வென்பின் இந்தியாவுஎச்சரித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர்,
இலங்கை வரவுள்ள சீனக் கப்பல் விவகாரத்தில், இந்தியா தேவையற்ற அழுத்தங்களை இலங்கைக்கு வழங்கி வருகிறது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் இரு நாடுகளாலும்
பொதுவான நோக்கங்களுக்காக சுயாதீனமாக தெரிவு செய்யப்பட்டவை.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் மூன்றாந்தரப்பினரை இலக்காகக் கொண்டவை அல்ல.
கப்பலின் இலங்கை வருகை ஆய்வுகளுக்கானதே. அதிலுள்ள விஞ்ஞான ஆய்வுகளை நியாயமாக பார்க்க வேண்டும்.
வழமையான சூழ்நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிமாற்றங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்படும் தடை நிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளது.