vinoo
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாதிகளாக சித்தரித்து மாணவர்கள் பாதையை மாற்றாதீர்!!

Share

அஹிம்சை வழியில்   போராடும் மாணவர்களைப் பயங்கரவாதிகளாக இந்த அரசாங்கம்   சித்திரிக்குமாக இருந்தால், அவர்களின் பாதை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம்  எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உறையாற்றும்போதே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் கூறுகையில்,

ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் மரணிக்காது உயர்த்துடிப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் குறிகாட்டியே தேர்தல். அதாவது மக்களுக்கான வாக்குரிமை. மக்களது விருப்புக்கு மாறாக அரசியலமைப்புக்கு முரணாக நமது நாட்டில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் அனைத்தும் அரசாங்கம் தோல்வியடைந்து விடுவோமா என்ற காரணத்துக்காக   ஒத்திவைக்கப்படுகின்றன இதுவே எமது நாட்டின் ஜனநாயன பெருமை.

பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது  அரச படையினர் , குண்டர் படையினர் திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தினார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிராகவும் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் மாணவர்கள் இன்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை அரசு  பயங்கரவாதிகள் என சொல்லுகின்றது. அரசியல் கட்சிகளின் பயங்கரவாதிகள் என கூறுகின்றார்கள். அஹிம்சை வழியில்  பேராடுபவர்களை நீங்கள் பயங்கரவாதிகள் என கூறினால் அவர்களின் பாதை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...

7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்...

8 7
உலகம்செய்திகள்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பின் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

இலங்கை உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்காக...

9 6
இலங்கைசெய்திகள்

9 வயது சிறுமிக்கு தாயின் காதலனால் நேர்ந்த துயரம்

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 9 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக தொடர்ந்து தகாத உறவுக்கு உட்படுத்திய...