நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனிக் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என இறக்குமதியாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் தற்போது சீனிக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, சீனி ஒரு கிலோ, 155 ரூபா முதல், 160 ரூபா வரை, விற்கப்படுகின்றது.
துறைமுகத்தில், சீனிக் கொள்கலன்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மெற்றிக்தொன் அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய சுமார் 500 கொள்கலன்களும் தற்போது தேங்கிய நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன.
சீனிக் கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதால் இறக்குமதியாளர்களிடம் சீனி இருப்பு இல்லை. ஆனால் சீனியை பதுக்கி வைத்திருந்தவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வழமை போன்று வங்கிகள் டொலர்களை வழங்கியிருந்தால் கொள்கலன்கள் தேக்கியிருக்க சாத்தியம் ஏற்பட்டிருக்காது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு, இறக்குமதியாளர்கள் அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment