வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயைத் திருடி அதை, 7 ஆயிரத்து 500 ரூபாவுக்கு அடகு வைத்த சம்பவம் ஒன்று பலாங்கொடவில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் பலாங்கொட, கிரிமெடிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அடகு வைக்கப்பட்ட நாயும் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பலாங்கொட நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Leave a comment