அவசரத்திற்கு நமக்கு உதவி புரியும் இந்தியாவை ஒருநாளும் பகைத்துக் கொள்ளக்கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய திகாம்பரம் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
இலங்கையில் கேஸ், பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் அதேவேளை பொருளாதார நெருக்கடியும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பழனி திகாம்பரம் நாடு இந்தளவு பாரிய சிக்கலில் இருக்கும் போது இந்தியா 900 மில்லியன் கடனுதவி வழங்கி கை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியாவுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கும்போது சில தொழிற்சங்கங்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் சீனாவுடன் அவ்வாறு அபிவிருத்திகளை செய்ய முனையும்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதில்லை எனவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment