சீனாவின் ‘Air China’ (எயார் சைனா) விமான நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஜூலை 03ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்க வரை 3 விமான சேவைகளும், கட்டுநாயக்காவில் இருந்து சீனாவின் சிச்சுவான் வரை 3 விமான சேவைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவின் சிச்சுவான் நகரில் இருந்து புறப்படும் Air China CA 425 விமானம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் சேவையை வழங்கவுள்ளதுடன் திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களில் இரவு 8.55 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.
கட்டுநாயக்கவில் இருந்து புறப்படும் Air China CA 426 விமானம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் சேவையை வழங்கவுள்ளதுடன் திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் சிச்சுவான் நகரை சென்றடைய உள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment