நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை ஆராய்வு செய்வதற்காக சீன நிபுணர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று செயலிந்திருந்தது. இதுதொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்தார் எனக்கூறப்படுகிறது.
இதேவேளை மின் பிறப்பாக்கி விரைவில் பழுதுபார்க்கப்பட்டு, 300 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படுமெனக் கூறப்படுகிறது.
அதேநேரம் மின் விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமை பெருமளவில் தீர்க்கப்படும். அதேவேளை, மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரியை தடையின்றி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
#SrilankaNews