images 2
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் இலங்கையர்கள் உதவ முன்வர வேண்டும்! – அசாத் சாலி கோரிக்கை

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், புலம்பெயர் இலங்கையர்களும் உதவ முன்வர வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அந்நியச்செலாவணி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிசெய்வதற்கு, நாட்டிற்குள் அதிகளவு டொலர் வரவேண்டும். புலம்பெயர் இலங்கையர்கள், வௌிநாடுகளில் இதைச் சேகரித்து இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பும் முயற்சிகளில் இறங்குவது அவசியம். இவ்விடயத்தில், குறுகிய மனநிலையில் செயற்படக் கூடாது.

சகல கட்சிகளின் தலைவர்களும் ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதால், பொருளாதார மேம்பாடுகளை அடைந்துகொள்ளும் வழிகள் விரைவில் திறக்கப்படலாம். எனவே, இளைஞர்கள் இவ்விடயம் பற்றி சிரத்தை கொள்வதுதான் இன்றைய அவசரத் தேவை.
உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான அமைதியை நாட்டில் கொண்டுவரும் பொறுப்பையும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவு உள்ளீர்க்கும் சூழலையும் இளைஞர்களே ஏற்படுத்த வேண்டும். தனித்தனி அஜந்தாக்களின் நாட்டின் இன்றைய சூழலை பாவிப்பதற்கு முயல்வது, பொருளாதாரத்தை அடிமட்டத்தில் வீழ்த்திவிடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...