Pointpedro
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Share

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் காரைக்கால் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களும் , மயிலாடுதுறையை சேர்ந்த 7 மீனவர்களும் கடந்த 30ஆம் திகதி காரைக்காலில் இருந்து படகில் கடற்தொழிலுக்காக புறப்பட்டுள்ளார்கள்.

குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் கடற்படையினர் மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து மன்று அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டுள்ளது.

#SriLnkaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...

17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது...