image 6483441 1 1
இலங்கைசெய்திகள்

‘ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ – யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை உடன்படிக்கை

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ‘ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கைநெறி மற்றும் ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல் செயற்திட்டம் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகைள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை, காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் சார்பில் அதன் இலங்கை நாட்டுக்கான பிரதிப் பணிப்பாளர் லசந்தி டஸ்கோனும் இவ்விரு புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், கலைப்பிடத்தின் பதில் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுமார், சட்டத்துறைத் தலைவர் திருமதி எஸ். துஷானி மற்றும் விரிவுரையாளர்கள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

முதலாவது உடன்படிக்கையின் பிரகாரம் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் ‘ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கை நெறியொன்றை விருப்ப வெளிப்படுத்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முப்பது சட்டத்துறை மாணவர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கற்கை நெறியின் மூலமாக ஜனநாயக மேம்பாட்டில் குடிமக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பங்களிப்பு முதலான சமூகம் சார் கோட்பாடுகள் தொடர்பான அறிமுகம் வழங்கப்பட எதிர்பார்க்கப்படுவதோடு மாணவர்களின் மென்திறன்கள், பொதுத் தொடர்பாடல் தகைமைகள் முதலானவற்றை அபிவிருத்தி செய்தலும் மற்றுமொரு நோக்கமாகக் காணப்படுகின்றது.

இரண்டாவது உடன்படிக்கையானது ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல் செயற்திட்டம் ஒன்றை விருப்ப வெளிப்படுத்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முப்பது சட்டத்துறை மாணவிகளுக்கு வழங்கும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வலுவூட்டல் செயற்திட்டத்தின் நோக்கங்களாக மாணவிகளை அரசியல் மற்றும் சமூக வெளிகளில் தலைமைத்துவத்தை ஏற்பவர்களாக வடிவமைத்தலும் தேவையான திறன் விருத்திக்கு வழிகாட்டுதலும் காணப்படுகின்றன.

ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை வரை சான்றிதழ் கற்கை நெறியினையும், அவள் தலைமையில் வலுவூட்டல் நிகழ்வினையும் தொடர்ச்சியான தன்மையில் நிறைவேற்றிச் செல்லக்கூடிய உறுதிப்பாட்டுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...