கர்ப்பம் தரிப்பதை தாமதியுங்கள்!
நாட்டில் டெல்டா வைரஸின் மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதால், பெண்கள் தாங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருட காலத்துக்கு தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹர்ச அத்தப்பத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாத் தொற்று நாட்டை ஆட்டிப்படைக்கும் நிலையில் டெல்டாவின் மாறுபாடும் தற்போது அதிகமாக பரவலடைகிறது.
இதனால் தாய் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே உங்கள் கர்ப்பத்தை ஒரு வருடத்துக்கு தாமதப்படுத்துங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது கர்ப்பவதிகளின் இரண்டாவது அல்லது மூன்றாவது மாதங்களில் தொற்று பரவும் நிலை அதிகமாகக் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment