law
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

Share

யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை அவர்களின் இரண்டு படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பன அரச உடமையாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து நீதவான் 11 மீனவர்களையும் இன்றைய தினம் வெள்ளிககிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 11 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததுடன் , அவர்களின் படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை அரச உடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...