அவசரக்காலச் சட்டம் மீதான விவாதம் நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில், நாட்டு மக்களுக்கு உள்ள போராடுவதற்கான உரிமையை ஒடுக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை எனவும் அக்கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
#SriLankaNews
.
Leave a comment