image 4e82ab4f19
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் அரசு கட்சி வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்!!

Share

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, வேட்பாளர் அற்புதம் சற்குணதாஸ் தெரிவித்தார்.

இவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

திடீர் மரணவிசாரணை அதிகாரியும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய இவர்   முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை இன்று (30) நடத்தினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புனிதவளன் நகர் வட்டாரத்தில் போட்டியிடுகின்றேன். தான் தேர்தலில் போட்டியிடுவது பல கட்சியினருக்கு விருப்பமில்லாத சூழ்லிலை காணப்படுகின்றது அதனால் தன்மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. 1970 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழ்த் தேசியத்தினை நேசித்தவன் அன்றில் இருந்து இன்றுவரை இலங்கை தமிழ் அரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் பயணித்தவன் என்றார்.

தேர்தல் வேட்பாளராக அறிமுகமான பின்னர் கடந்த 25 ஆம் நாள் வரை தொலை பேசியில் இரண்டு தடவைகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். வெளியில் வந்தால் கொலை செய்வோம் என்று தொலைபேசியின் ஊடாக  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்றார்.

அவர்களின் தோல்வி பயம் காரணமாக இந்த மிரட்டல்களை அவர்கள் விடுகின்றார்கள். இந்த மிரட்டல் தொடர்பில் கடந்த 25.01.2023 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...