பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, டளஸ் அழகப்பெருமவை பிரதமராக நியமிக்கும் திட்டத்தை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
விமல் வீரவன்சவின் தரப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினரும், அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான குழுவினரும் இதற்கான நகர்வுகளில் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்களை பரிந்துரைத்திருந்த இந்த குழு, டலஸ் அழகப்பெருமவுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment