மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக உயர்ந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதுவரை மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 500 மெற்றிக் தொன்னாக இருந்தநிலையில், தற்போது அது 600 மெற்றிக்தொன்னாக அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக சந்தையில் பற்றாக்குறையில்லாமல் விநியோகத்தைப் பராமரிக்க வேண்டியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மீனவ சமூகத்துக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தையும் உரிய முறையில் மேற்கொண்டு வருவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment