இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினர் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில், இராணுவ மற்றும் பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட அவசியமற்ற செலவீனங்கள் மற்றும் கைவிடக்கூடிய அல்லது பிற்போடக்கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அரசு இயந்திரத்தின் சுமையான விடயங்கள் மற்றும் எரிபொருள், எரிவாயு, உணவு, உரம் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment