தமிழ் மக்கள் கூட்டணியை வலுப்படுத்தி இளைஞர்களிடம் கொடுப்பதற்கு நான் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் தற்கால சமூகத்தில் தன்னலமற்ற மக்கள் சேவையை இலக்காக கொண்ட இளைஞர்கள் இல்லாமையினைக் காண கூடியதாகவுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள். அரசியல் பணக்காரர்களாக வர நினைக்கிறார்கள். என்னுடைய வாழ்காலம் என்பது இன்னும் சிறிது காலம் என்பது அனைவருக்கும் தெரியும்.
80 வயதுக்கும் மேல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி நாடாளுமன்ற அங்கத்துவமும் பெறுவது இதுவே முதல் தடவை என என்னை ஒருவர் பாராட்டினார்.
அந்தவகையில் எங்களுடைய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளமை எமக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளது. அந்த வகையில் இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார்.
#SrilankaNews
Leave a comment