நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை கட்டம் கட்டமாக திறக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த 4 வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தொற்று வீதம் சற்று குறைவடைந்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் 21 க்கு பின்னர் நாட்டை கட்டங்கட்டமாக திறக்க சாத்தியம் உள்ளது.
நாட்டில் தடுப்பூசித் திட்டத்தை விரைவாக முன்னெடுப்பதுடன் இதர சுகாதார விடயங்களையும் முறையாக பின்பற்றினாலே தொற்று குறைவதற்கான சாத்தியம் உண்டு.
அதேவேளை நாட்டில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். தொற்றாளர் தொகை குறைவடைந்து வந்தாலும் நாடு இன்னமும் அபாய வலயத்தில் இருந்து மீளவில்லை எனவும் சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Leave a comment