கிரிக்கெட் நிறுவன மோசடி ! – நாமல் எச்சரிக்கை!
கடந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய் மொழிமூலமான கேள்வி பதிலின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
கடந்த ஆட்சியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன,
இந்த முறைகேடுகளுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக விரைவில் கோப் குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
விளையாட்டுத்துறையில் குளறுபடிகள் எவையாவது ஏற்பட்டால் யார் எவர் என்ற பாராபட்சமன்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment