கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் திகதி அறிவிப்பு!

corona vaccination pti

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி செலுத்தியை அட்டையைக் கொண்டு செல்வதைக் கட்டாயமாக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பான நடவடிக்கைகளை முன் நகர்த்திக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு குழுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version