sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு பாதாளத்தை நோக்கி! – எச்சரிக்கிறார் சஜித்

Share

உற்பத்திப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களை அரசுடமையாக்கினால் நாடு மேலும் வங்குரோத்தாகிவிடும் என்றும் இந்த வகையில் எந்த நாடும் அபிவிருத்தியடையவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் த புளூ பிரின்ட் பொருளாதார மாநாட்டின் மற்றுமொரு கட்ட மாநாடு திங்கட்கிழமை (27) குருநாகல் மாவட்டத்தை இலக்காக் கொண்டு குருநாகலில் இடம்பெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தை ஆள்பவர்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சார்ந்து தற்காலிக பொறுப்பாளர்களாக இருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு நாடு தங்களுக்கு முழு உரித்தோடு எழுதித்தரப்பட்டு விட்டது என்ற போக்கில் பலர் நினைப்பதாகவும், இந்த தற்காலிக நிர்வாகப் பொறுப்பு தேர்தலின் பின்னர் மாறுபடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஓர் அரசியல்வாதிக்கு ஆட்சி நிருவாகத்தின் போது இரு வழிகளிலுமான விடயப்பரப்பு பற்றிய சிறந்த புரிதல் இருக்க வேண்டும் எனவும், அந்த புரிதல் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாக பிரயோகிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான திறமை இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும், ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் சந்தை சக்திகளை அடிப்படையாகக் கொண்ட மனிதநேய முதலாளித்துவத்தைப் பின்பற்றுவதாகவும், ஒரு நாட்டின் செல்வத்தை அரசால் அன்றி, தனியார் துறையாலையே உருவாக்க முடியும் எனவும், இவ்வாறு உருவாக்கப்படும் செல்வம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

உற்பத்திப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களை அரசுடமையாக்கினால் நாடு மேலும் வங்குரோத்தாகிவிடும் எனவும், இந்த வகையில் எந்த நாடும் அபிவிருத்தியடையவில்லை என்றார்.

எனவே ஒரு மாயைக்குப் பின்னால் சென்று, அநாதரவாக வேண்டாம் எனவும், பொய் ஏமாற்று மாயைகளால் எமது நாடு வங்குரோத்தாகி போயுள்ளதாகவும் தெரிவித்த அவர், அதன் இரண்டாவது அத்தியாயத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்காதீர்கள் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு நடந்தால் நாடு இன்னொரு பாதாளத்தில் விழும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நேரத்தில் நாட்டுக்கு சிறந்த ஆட்சியே தேவை என்றும், திருட்டு, ஊழல், மோசடிகளைத் தடுத்து நல்ல முதலீட்டுச் சூழலை உருவாக்க வேண்டும் எனவும், எந்த சூழ்நிலையிலும் நாங்கள் புன்னியத்திற்கு முதலீடுகளையோ அல்லது உதவிகளையோ பெறமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பொருத்தமான சமூக பொருளாதார அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...