Vaccine Card
இலங்கைசெய்திகள்

கட்டாயமாகிறது கொரோனா தடுப்பூசி அட்டை!

Share

கொரோனா வைரஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தல் அட்டை அத்தியாவசியமாகும் பிரதேசங்களின் பெயர்ப் பட்டியலை ஓரிரு தினங்களில் வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டையை கண்டிப்பாக்கும் சட்டம் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை நாட்டில் ஒரு கோடி 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்திற்கும் அதிகமாகும் என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்பதாக மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...