பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜென் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாள்களில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு மேற்கொள்ளப்படுகின்ற அன்ரிஜென் பரிசோதனைகளுக்கு எவ்வித கட்டணங்களும் அறிவிடப்படமாட்டாது.
குறித்த சேவைகளை கொழும்பு மாநகர சபைக்குள் தொழிலுக்காக வருகை தருவோர் மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் உள்பட அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி அறிவித்துள்ளார்.
1 Comment