வர்ணத்தால் சர்ச்சை – யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம்
யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்னுள்ள யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான பிள்ளையார் கோயில் குளத்தைச் சுற்றியுள்ள தூண்களில் பெளத்த கொடியில் உள்ள நிறங்களை ஒத்த வர்ணம் தீட்டப்பட்டுள்ளது என சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த சர்ச்சைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டத்தை அடுத்து யாழ்.மாநகர சபை உடனடியாக அந்த .வேலைத்திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக வங்கியின் நிதி உதவியில் மீள புனரமைக்கப்பட்டு வரும் இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள கம்பங்களுக்கு இவ்வாறு வர்ணம் பூசும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திகள் தொடர்பில் யாழுக்கு கடந்த வாரம் களப் பயணம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த பகுதி பணிகளையும் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment