தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமையுரையை தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆற்றினார்.
“தமிழர் தாயக அபிவிருத்தியில் அரசியலின் வகிபாகம்” எனும் தலைப்பில் சமுக செயற்பாட்டாளர் இ.செல்வினும் “தமிழ்தேசிய அரசியலில் சிவில் அமைப்புக்களின் வகிபாகம்” எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக்கற்கைத் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராமும் நிகழ்த்தினர்.
“தமிழ்தேசிய அரசியலில் பூகோள அரசியலின் வகிபாகம்” எனும் தலைப்பில் அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கமும் உரை நிகழ்த்தினர்.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் டிசம்பர் 26 வடமாகாண இயற்கை பேரிடர் தடுப்பு தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
#SrilankaNews
Leave a comment