இன்று காலை கைது செய்யப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 வது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று (29) அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்த நிலையில், குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைக்குச் சென்ற பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆட்கடத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தன.
அவரை கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (28) பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews

